உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி வட்டார அளவில் மாணவர் கலைத் திருவிழா

கொடுமுடி வட்டார அளவில் மாணவர் கலைத் திருவிழா

கொடுமுடி வட்டார அளவில்மாணவர் கலைத் திருவிழா கொடுமுடி, அக். 27-ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி, தாமரைபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாள் நடந்தது. இசை, நடனம், நாடகம், கவின் கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் முதலிடம் பிடிக்கும் மாணவன், மாணவி, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை