உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோகோ விளையாட்டு போட்டி வி.இ.டி.,கலை கல்லுாரி முதலிடம்

கோகோ விளையாட்டு போட்டி வி.இ.டி.,கலை கல்லுாரி முதலிடம்

ஈரோடு: ஈரோடு, திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, கல்லுா-ரிகளுக்கு இடையேயான கோ-கோ விளையாட்டு போட்டி (டி - மண்டல ஆண்கள் பிரிவு) நடைபெற்றது. இதில், 13 கல்லுாரி-களில் இருந்து அணிகள் பங்கேற்றன. பங்கு பெற்ற அணிகளில், வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரி முதல் இடத்தையும், கோபி கலை அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், காங்கேயம் அரசு கலைக் கல்லுாரி மூன்றாம் இடத்-தையும், மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லுாரி நான்காம் இடத்-தையும் பெற்றன.கல்லுாரி நிர்வாகி பாலசுப்ரமணியம் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினார். மேலும் கல்லுாரி முதல்வர் முனைவர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் முனைவர் லோகேஸ் குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுரேஷ் ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை