உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சரி செய்யப்படாத கொல்லம்பாளையம் பாலம்;விபத்தில் சிக்கும் வாகனங்கள்; தவிக்கும் மக்கள்

சரி செய்யப்படாத கொல்லம்பாளையம் பாலம்;விபத்தில் சிக்கும் வாகனங்கள்; தவிக்கும் மக்கள்

ஈரோடு:கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தரைப்பகுதி கான்கிரீட் சாலை, முறையாக சீரமைப்பு செய்யப்படாததால், வாகனங்கள் செல்வதில் மீண்டும் தடுமாற்றம் ஏற்படுகிறது. அவ்வப்போது விபத்தும் நடக்கிறது.ஈரோடு மாநகரில் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இப்பாலம் வழியாகவே தென் மாவட்டங்களுக்கு செல்ல, வர முடியும். பாலத்தின் கீழ்பகுதி கான்கிரீட் தளத்தில் சேதமானது. கலெக்டர் அறிவுறுத்தல்படி ரயில்வே நிர்வாகம் சார்பில், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சரி செய்யும் பணி நடந்தது. இதற்காக ஒரு மாதம் போக்குவரத்து மாற்றப்பட்டது. அதன் பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. ஆனாலும் பாலத்தில் தண்ணீர் செல்லும் இரும்பு சிலாப் பகுதி சரிவர கான்கிரீட் தளத்துடன் இணைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் இறங்கி ஏறி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தற்போதைய நிலை நீடித்தால் விரைவில் பாலத்தின் கீழ்புற பகுதியில் வாகனங்களே சென்று வர முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகும். தற்போது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு இடையே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் சேதமான பாலத்தை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில்வே துறைதான் பொறுப்புஇதுகுறித்து விபரம் கேட்டபோது நெடுஞ்சாலை துறை தரப்பினர் கூறியதாவது: ரயில்வே துறையினர் தான் பழுதை சரி செய்ய வேண்டும். பாலத்துக்கு கீழ் சீரமைப்பு பணி ரயில்வே துறையின் கீழ்தான் வரும். பழுதை சரி செய்யவும் ஒத்து கொண்டனர். ஆனால், ஒரு மாதத்துக்குள் மீண்டும் சீரமைப்பு பணி மேற்கொண்ட இடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தரமான பணி மேற்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளனர். ஏற்கனவே இப்பணியை மீண்டும் மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை, கலெக்டர் ஆகியோர் ரயில்வே துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர். ரயில்வே துறையில் தான் அதிக பாரம் கொண்ட இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்படுகிறது. அதிக பாரம் கொண்ட இரும்பு கம்பிகளை வைத்து பழுதை சரி செய்ய வேண்டும். ரயில்வே துறையினர் யார் சொன்னாலும் பணியை செய்வதில்லை. எம்.பி., அல்லது அமைச்சர்கள் தலையிட்டாலாவது செய்வார்களா? என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி