மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 230 மனுக்கள் ஏற்பு
02-Dec-2025
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க நுாற்றுக்கணக்கான மக்கள், அதிகாரிகள், அலுவலர்கள் வந்திருந்-தனர். வளாகத்தில் பொது கழிப்பறைக்கு வெளியே மரத்தடியில் மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது கழிப்பறை சென்ற சிலர், 'அவ்விடத்தில் பாம்பு உள்ளது' என்று தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர் மெதுவாக கலைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் தேடினர். பாம்பு பிடிக்கும் கருவி மூலம், கல்லின் அடியில் பதுங்கியிருந்த, 3 அடி நீள 'கொம்பேரி மூக்கன்' பாம்பை லாவகமாக பிடித்தனர். சாக்-குப்பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
02-Dec-2025