மேலும் செய்திகள்
விநாயகர், அம்மன் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
28-Aug-2024
சென்னிமலை: சென்னிமலை யூனியன், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, வெப்பிலி ராஜ கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லஷ்மி ஹோமம், தனபூஜை, மாலை 6:00 மணிக்கு வாஸ்து ஹோமம், முதற்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 8:30 மணிக்கு ராஜகணபதி கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜகணபதி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
28-Aug-2024