உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேலோ இந்தியா விளையாட்டில் குமுதா பள்ளி மாணவிக்கு தங்கம்

கேலோ இந்தியா விளையாட்டில் குமுதா பள்ளி மாணவிக்கு தங்கம்

ஈரோடு: கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு, 2025-ம் ஆண்டுக்-கான தெரிவுப்போட்டி சென்னையில் நடந்தது. இதில், 18 வயது பெண்கள் கையுந்து பந்து பிரிவுக்கான, தமிழக அணியில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீ உட்பட, 14 மாணவியர் தேர்வா-கினர். பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த போட்டியில் பங்கேற்-றனர். இதில் தமிழக அணி இறுதிப்போட்டியில் மேற்கு வங்காள அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.தேசிய அளவில் சாதனை படைத்த மாணவியை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட உடற்-கல்வி ஆய்வாளர் சாலமன் பாராட்டி வாழ்த்தினர்.மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி, விளை-யாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்-தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை