தொழிலாளர் துறை ஆய்வு 27 கடைகள் மீது நடவடிக்கை
ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.எடையளவு சட்டப்படி, மின் வணிகம் நடக்கும் இடங்கள், ரேஷன் கடைகளில் விதி மீறல் தொடர்பாக, 52 கடைகளில் நடந்த ஆய்வில், 23 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது. எடையளவு, பொட்டல பொருட்கள் விதிப்படியும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் குறித்து, 12 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 2 கடைகளில் முரண்பாடு அறியப்பட்டது.குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள், கொத்தடிமைகள் குறித்து, வாகன விற்பனை மற்றும் பழுது பார்த்தல் நிறுவனங்கள் என, 5 இடங்களில் நடந்த ஆய்வில், முரண்பாடு கண்டறியவில்லை.குறைந்த பட்ச ஊதியம் குறித்து, 27 தொழில் நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 2 நிறுவனங்களில் குறைபாடு அறியப்பட்டு, இணை ஆணையர் முன்னிலையில் நடவடிக்கைக்கு மனு தாக்கல் செய்தனர். குழந்தை தொழிலாளர், தொழிலாளர் துறை சார்ந்த புகாரை, 1098, 155214 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.