உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவரின் விரலை கடித்த கூலி தொழிலாளி கைது

டிரைவரின் விரலை கடித்த கூலி தொழிலாளி கைது

கோபி; கவுந்தப்பாடி அருகே கவுந்தப்பாடி புதுாரை சேர்ந்-தவர் ஜனார்த்தனன், 41, லாரி டிரைவர்; இவரின் வீட்டருகே வசிக்கும் தொழிலாளி அன்பழகன், 52; நேற்று முன்தினம் மாலை, அன்பழகன் அப்பகு-தியில் ஜட்டியுடன் நின்றிருந்தார். இதை தட்டி கேட்ட ஜனர்த்தனை தகாத வார்த்தை பேசி, இடது கை கட்டை விரலில் கடித்துள்ளார். இதில் விரல் துண்டானது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த ஜனார்த்தனன் கொடுத்த புகாரின்படி, வழக்குப்ப-திவு செய்த கவுந்தப்பாடி போலீசார், அன்பழ-கனை நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை