உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி

டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி

சத்தியமங்கலம்,சத்தியமங்கலம் அடுத்த கொண்டமுத்தனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 45; கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு சொந்த வேலையாக டி.வி.எஸ்.,50ல் கோபி ரோட்டில் சென்றார். அதே சாலையில் எதிரில் வந்த எக்ஸ்ட்ரீம் பைக், டி.வி.எஸ்.,50 மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். எக்ஸ்ட்ரீம் பைக்கை ஓட்டி வந்த நம்பியூர், செட்டி பாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திடம், 25, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான பழனிசாமிக்கு கருப்பாள் என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை