உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேகத்தடையால் விபத்து கூலி தொழிலாளி சாவு

வேகத்தடையால் விபத்து கூலி தொழிலாளி சாவு

கோபி:கோபி அருகே அளுக்குளியை சேர்ந்தவர் நாகூர் கனி, 40, கூலி தொழிலாளி; கடந்த, 5ம் தேதி இரவு யமாகா பைக்கில், கோபி-சத்தி சாலையில் சென்றார். மூலவாய்க்கால் என்ற இடத்தில் வேகத்தடையை கவனிக்காமல் ஏறியபோது நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி ரபியத்துல் பசீரியா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை