மேலும் செய்திகள்
நில அளவை அலுவலர்கள் போராட்டம்
10-Dec-2024
நில அளவையாளர்கள்உள்ளிருப்பு போராட்டம் தாராபுரம், டிச. 10-தமிழ்நாடு நில அளவை அலுவலர் அமைப்பின் சார்பில், நில அளவையாளர்கள் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு, கால நிர்ணயம் வழங்காமல், ஊழியர்கள் மீது தனிச்சுமை சுமத்துவது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரும், 19ல் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர்.
10-Dec-2024