உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புஈரோடு, நவ. 22-ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டதை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அட்வகேட் அசோசியேசன், ஈரோடு பார் அசோசியேசன் சார்பில், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பவானி, கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டத்தில் பணியாற்றும், ௨,௦௦௦க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். * பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், பவானி வழக்கறிஞர் சங்கத்தினர் சார்பில், தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட, 25க்கும் மேற்பட்ட வக்கீல்கள், பவானி- மேட்டூர் சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானி போலீசார் அறிவுரையால், ௧௦ நிமிடத்தில் மறியலை கைவிட்டனர். மறியலில் மூத்த வழக்கறிஞர் மோகன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை