சிறுத்தை தாக்கி ஆடு பலி
சத்தியமங்கலம், தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் அருகே கானகரை மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இதனால் எழுந்து பார்த்தபோது, ஒரு சிறுத்தை ஆட்டை கழுத்தில் கவ்வி கொண்டிருந்தது. அவர் சத்தமிடவே ஆட்டை போட்டு விட்டு தப்பி ஓடியது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே வீட்டில் நாயை, சிறுத்தை கவ்வி சென்றது. தற்போது ஆட்டை கடித்துள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் சிறுத்தை கவ்விப்பிடித்ததில் ஆடு பலியாகி விட்டது.