உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு

தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 40; தாராபுரம்-ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது எதிர்புறத்தில் பாழடைந்த ஒரு கட்டடம் அருகில், 2 அடி உயரத்தில் சிறுத்தை ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின்படி தாராபுரம் போலீசார் மற்றும் காங்கேயம் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் சிலரும் சிறுத்தையை அப்பகுதியில் கண்டதாக கூறினர். இதனால் கோனேரிப்பட்டி, ரங்கபாளையம், துலுக்கனுார், ஆச்சியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை