ஆசனுாரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்
சத்தியமங்கலம், ஆசனுார் அருகே ஒங்கல்வாடியை சேர்ந்த விவசாயி மாதேவசாமி.கால்நடை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, இவர் வளர்த்து வரும் கன்றுகுட்டியை தாக்கி கொன்றது.பாதி உடல் மட்டுமே தொழுவத்தில் கிடந்தது. மீதி உடலை சிறுத்தை கொண்டு சென்று விட்டது தெரிந்தது. இப்பகுதியில் சிறுத்தைக்கு கால்நடைகள் பலியாவது தொடர்வதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.