உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கடிதம்

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கடிதம்

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்புமறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கடிதம்ஈரோடு, அக். 19-மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர், தமிழக எம்.பி.,க்களுக்கு ஈரோட்டை சேர்ந்த தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:ரயிலில், 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது. பயணிகளும் இதை பயன்படுத்தி, கூட்ட நெரிசலை தவிர்த்தனர். ரயில்வே துறைக்கும், முன்பதிவால் வருவாய் கிடைத்தது. தற்போது முன்பதிவு காலம், 4 மாதங்கள் என்பதை, 2 மாதங்களாக குறைத்துள்ளது, பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.இதன் மூலம், எப்போதும் ரயில்வே ஸ்டேஷனிலும், ஆன்லைனிலும் டிக்கெட் பதிவு செய்ய கூட்டம் அதிகமாகவே காணப்படும். பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறையின்போது முன்பதிவு செய்வது சிரமமாகும்.சாதாரண பயணிகள் முதல், முதியோர், அவசர தேவைக்கு செல்வோர், மருத்துவ பரிசோதனைக்கு செல்வோர் உரிய காலத்தில் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும்.எனவே, முன்புபோலவே, 4 மாத காலத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி