உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 996 மகளிர் குழுக்களுக்கு ரூ.96.20 கோடி கடன்

996 மகளிர் குழுக்களுக்கு ரூ.96.20 கோடி கடன்

ஈரோடு, ஈரோட்டில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. இதில், 996 குழுக்களுக்கு, 96.20 கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்கி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசினார்.மாவட்டத்தில், 8,867 மகளிர் குழுக்களில், 94,281 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது மாவட்டத்தில் உள்ள பெண்களில், 10 சதவீதம் பேர் மகளிர் குழுவில் உள்ளனர். மீதி மகளிரும் இத்திட்டத்தில் இணைந்து, தங்கள் குடும்பம், வாழும் பகுதியை மேம்படுத்த வேண்டும். கடந்தாண்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புக்கு, 1,120 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டு, 1,168 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று கலெக்டர் பேசினார்.நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், மகளிர் திட்ட அலுவலர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !