மேலும் செய்திகள்
ரூ.2 லட்சத்துக்குதேங்காய் விற்பனை
22-Sep-2024
ரூ.1.37 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
16-Sep-2024
*ஈரோடு மாவட்டம் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 823 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 11 ரூபாய் முதல் 24 ரூபாய்; 41 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 103 ரூபாய் முதல் 121 ரூபாய்; 180 மூட்டை நிலக்கடலை வரத்தாகி, கிலோ, 68 ரூபாய் முதல் 73 ரூபாய்; ஆறு மூட்டை எள் வரத்தாகி ஒரு கிலா, 103 ரூபாய் முதல், 115 ரூபாய் வரை விற்றது.* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 3,605 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 32.88 ரூபாய் முதல் 37.89 ரூபாய் வரை, விற்றது.இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 331 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் ஒரு கிலோ, 12௪ ரூபாய் முதல் 13௪ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 92.17 ரூபாய் முதல், 125.49 ரூபாய் வரை விலை போனது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 3,௦௦௦ தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 33.25 - 40.55 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 55 மூட்டை வரத்தாகி, கிலோ, 103.89 - 126.69 ரூபாய்; மக்காச்சோளம் ஆறு மூட்டை வரத்தாகி, 9,௦௦௦ ரூபாய்க்கு விற்றது. பருத்தி, 491 மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 68.59 - 74.69 ரூபாய் வரை விற்றது. * எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காயர் ஏலம் நடந்தது. மொத்தம், 597 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 130.29 ரூபாய் முதல், 133.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 93.39 ரூபாய் முதல், 1௨௦ ரூபாய் வரை, 26,693 கிலோ கொப்பரை, 30 லட்சத்து, 25,968 ரூபாய்க்கு விற்பனையானது.
22-Sep-2024
16-Sep-2024