உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 582 காய் வரத்தானது. ஒரு தேங்காய், 16.25 ரூபாய் முதல் 32.75 ரூபாய் வரை, 2.91குவிண்டால் தேய்காய், 14,930 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 1,008 காய்கள் வரத்தானது. ஒரு காய் 15.50 - 24.15 ரூபாய் வரை விலை போனது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 349 கிலோ தேங்காய் வரத்தானது. கிலோ, 52 ரூபாய் முதல் 53 ரூபாய் வரை விற்றது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் ஒரு கிலோ, 600 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை-, 560, முல்லை-160, காக்கடா-300, செண்டுமல்லி- 60, கோழிகொண்டை-90, ஜாதி முல்லை-500 சம்பங்கி-15, அரளி-100, துளசி-50, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 45 கிலோ எடையில், 18 மூட்டை வரத்தானது. காய்ந்தது முதல் தரம் கிலோ, 65 ரூபாய் முதல் 67.30 ரூபாய்; இரண்டாம் ரகம், 62 ரூபாய் முதல் 64 ரூபாய் வரை, 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 80 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 180.89 முதல், 199.29 ரூபாய்த இரண்டாம் தரம் கிலோ, 145.99 முதல், 186.69 ரூபாய் வரை, 2,296 கிலோ கொப்பரை, 4.௩௦ லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை