மேலும் செய்திகள்
தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ ரூ.130
21-Oct-2025
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் வார சந்தையில் நேற்று வெற்றிலை சந்தை நடந்தது. மொத்தம், 80 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 15 ரூபாய், பெரியது, 35 முதல் 50; பீடா வெற்றிலை கட்டு, 20 முதல் 40 ரூபாய், செங்காம்பு வெற்றிலை கட்டு, 5 முதல் 15 ரூபாய்க்கும் என, 3 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்கப்பட்டது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 70,000 தேங்காய் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 70.70 - 74.19 ரூபாய், பச்சை தேங்காய், 49.99 - 66.40 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 105.19 ரூபாய் என, 24,273 கிலோ தேங்காய், 16 லட்சத்து, 56,952 ரூபாய்க்கு விற்றது.* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 12,295 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 55.65 - 69.36 ரூபாய் என, 4,068 கிலோ தேங்காய், 2.௭௧ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 144 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 218.99 - 220.99 ரூபாய், இரண்டாம் தரம், 140.99 - 218.99 ரூபாய் வரை, 7,458 கிலோ கொப்பரை தேங்காய், 14 லட்சத்து, 71,605 ரூபாய்க்கு விலை போனது.* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 650 கிலோ வரத்தாகி, கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலை கூடவில்லை. வரத்தான அனைத்து தென்னங் கருப்பட்டியும், 84 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 22 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தானது. கிலோ, 210 முதல் 235 ரூபாய்க்கு விற்றது. மூன்று மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 118 முதல் 121 ரூபாய்; ஆறு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 66 முதல் 83 ரூபாய்; 94 மூட்டை பருத்தி வரத்தாகி கிலோ, 67 முதல் 72 ரூபாய்க்கும் விற்றது.
21-Oct-2025