உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு அந்தியூரில் இடம் தேர்வு

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு அந்தியூரில் இடம் தேர்வு

அந்தியூர், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,, ஈடுபட்டுள்ளார். இதன்படி இன்னும், பத்து நாட்களில் அந்தியூர் சட்டசபை தொகுதியில் பரப்புரை நிகழ்த்தவுள்ளார். அதற்கான இடத்தை அ.தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா, பொரிக்கடை கார்னர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர். இதில் பொரிக்கடை கார்னரை, பரப்புரை நிகழ்த்தும் இடமாக தேர்வு செய்தனர்.ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., ரமணீதரன், நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய செயலாளர் நாராயணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, நகைக்கடை கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர், தேர்வு செய்யும் பணியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !