உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 500 கன அடியில் இருந்து, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 2,109 கன அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 98.91 அடியாகவும், நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி., ஆகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு, 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை நீர் திறப்பு, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை