உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரியில் ஆண் சடலம்

காவிரியில் ஆண் சடலம்

பவானி, பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக, பவானி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு, 45 வயது இருக்கும். வெள்ளை நிற கட்டம் போட்ட அரக்கை சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இடது கணுக்காலில் மருத்துவமனையில் போடப்பட்ட கட்டு இருநத்து. யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.* கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம், அமராவதிபுதுார் செல்லும் பாதையில், காளிங்கராயன் வாய்க்கால் பாலத்தின் அடியில், 55 வயது ஆண் உடல் கிடந்தது. வி.ஏ.ஓ., சிவசங்கர் புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி