உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது

மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி. சாலையில் வசிப்பவர் பாப்பம்மாள், 106; கணவன், குழந்தைகள் இல்லை. தனியாக வசிக்கிறார். இரு பெண்கள் கவனித்து கொள்கின்றனர். கடந்த, 11ம் தேதி மாலை வீட்டுக்குள் வந்த ஆசாமி, பாப்பம்மாள் போட்டிருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுபற்றிய புகாரின்படி ஈரோடு டவுன் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெயிண்டர் விஜயகுமாரை, 42, கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விஜயகுமாரை, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன் மூதாட்டி வீட்டு வேலைக்காக விஜயகுமாரின் தாய் வந்துள்ளார். ஒன்றரை மாதம் வேலை செய்தார். அப்போது தாயை பார்க்க மூதாட்டி வீட்டுக்கு விஜயகுமார் வந்துள்ளார். மூதாட்டி தனியாக வசிப்பதை கவனித்திருந்த விஜயகுமார், நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். முதன் முறையாக நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை