உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது

கோபி,கோபி அருகே வெடி பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே சுட்டிக்கல்மேடு என்ற இடத்தில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் நின்றிருந்த, எ.செட்டிபாளையத்தை சேர்ந்த பிரான்சிஸ், 40, என்பவரை, போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த சாக்கு பையில் ராக்கெட் வெடி, 300, வாழைக்காய் வெடி, 20, அவுட் வெடி மற்றும் சாட்டை பட்டாசு என அனுமதியின்றி வெடிபொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த வெடி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை