மேலும் செய்திகள்
ரேஷன் கடை பெண் ஊழியர் மீது வழக்கு
17-Oct-2025
ஈரோடு, சென்னிமலை அருகே வெப்பிலியில் ரேஷன்கடை செயல்படுகிறது. இங்கு ஆம்னி வேனில் அரிசி கடத்தி செல்லும் வீடியோ பரவியது. இதன் அடிப்படையில் விசாரித்த ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், கடை விற்பனையாளரான வெள்ளோடு மல்லிகா, 45, பெருந்துறை நஞ்சுண்டாபுரம் சீனிவாசன், 34, மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சீனிவாசனை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். அதேசமயம் ரேஷன் கடை ஊழியர் மல்லிகா, நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
17-Oct-2025