உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நண்பரின் வீட்டில் திருடியவர் கைது

நண்பரின் வீட்டில் திருடியவர் கைது

காங்கேயம், காங்கேயம், அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித், 25; இவருடன் கல்லுாரியில் படித்தவர், பல்லடத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், 23; கடந்த பிப்., மாதம் ரஞ்சித் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் ரஞ்சித் வீட்டுக்கு மேலும் இருவருடன் வந்து, ஹோம் தியேட்டர் மற்றும் 6,௦௦௦ ரூபாயை திருடி சென்றார்.இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிந்த காங்கேயம் போலீசார், சந்தோஷ்குமார் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த அன்புமணி, 24, ஆகியோரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.திருப்பூர், நெருப்பெரிச்சலை சேர்ந்த மணிகண்டன், 29, என்பவரை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை