உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,550 போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

1,550 போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

பவானி, சித்தோடு போலீஸ் ஸடேஷனுக்கு உட்பட்ட, நசியனுார், சிந்தன்குட்டையை சேர்ந்த சந்திரசேகர், 32, போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். இதில், 50 டேபின்டோடால் போதை மாத்திரை வைத்திருந்தது தெரிந்து, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் மும்பையில் இருந்து அவரது பெயருக்கு, 1,500 போதை மாத்திரை, கூரியர் மூலம் வந்துள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் கூரியர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனர். இதில் நசியனுாரில் ஒரு டிரேடிங் நிறுவனத்தில், 1,550 போதை மாத்திரை இருந்தது. அத்துடன், 800 கிராம் கஞ்சா, மூன்று செல்போன், 70 ஊசிகள், இரண்டு டி.வி.எஸ்., மற்றும் யமாஹா பைக்குகள், இரு கார்களை பறிமுதல் செய்தனர். சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை