போதையில் கிணற்றில் குளிக்க முயன்றவர் பலி
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 38; அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக நேற்று மதியம், 2:00 மணியளவில் குதித்தார்.குடிபோதையில் இருந்ததால் நீந்த முடியாமல் தத்தளித்தவர் கூச்சலிட்டார். இதைக்கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.