உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் ஷோரூமில் திருடியவருக்கு சிறை

மொபைல் ஷோரூமில் திருடியவருக்கு சிறை

பவானி: பவானி அருகே மூன்றுரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த, 1ம் தேதி கடையின் தகர கூரை சீட்டை அறுத்து, லேப்டாப் திருட்டு போனது. புகாரின்படி பவானி போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பத்துார் மாவட்டம் மூர்த்தியை, 32, போலீசார் நேற்று கைது செய்தனர். பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட லேப்டாப்பை, மோகன்ராஜிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை