மரவள்ளி கிழங்கு விலை டன் ரூ.6,500க்கு வீழ்ச்சி
ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், தாளவாடி, பர்கூர் உட்பட பல்வேறு மலைப்பகுதி கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டும், நடப்பாண்டு துவக்கத்திலும், 1 டன் மரவள்ளிக்கிழங்கு, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது.தற்போது சீசன் இல்லாத நிலையிலும், மரவள்ளிக் கிழங்கு அறுவடை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், விலை, டன், 6,500 ரூபாய் என குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:கடந்தாண்டும், நடப்பாண்டு துவக்கத்திலும், 1 டன், 14,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 6,500 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல, 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை, 3,800 ரூபாய், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு, 2,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.