மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு
02-Oct-2024
ஈரோடு: ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே, ரயில்வே காலனி குடியிருப்பு உள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் சேதமா-னதால், 10 ஆண்டுக்கு மேலாக யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடுகள் அனைத்தும் பாழடைந்தும், இடிந்தும் காணப்-படுகிறது. இதில் ஒரு வீட்டின் முன் ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு, 40 வயது இருக்கும். யார், எந்த ஊர் என தெரியவில்லை. கொலை செய்-யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2024