மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பவானி: பவானி அருகே காலிங்கராயன்பாளையம் மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, காலிங்கராயன்பாளையம் புதுார் ஊர் கொத்துக்காரர்கள் பழனிசாமி, தங்கவேல், மாரிமுத்து தலை-மையில் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், 7:00 மணிக்கு மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராள-மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.