உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே, சாணார்பதியில் பழமை வாய்ந்த குஞ்சு மாரியம்மன் கோவிலில் புதிதாக மூன்று நிலை கோபுரமாக உயர்த்தி திருப்பணிகள் நடந்தன. இதை தொடர்ந்து மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. நேற்று காலை யாகபூஜையை தொடர்ந்து, கோபுரங்களுக்கு கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணியளவில் மாரியம்மன், செல்வ விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி