மைக்கேல்பாளையம் பஞ்சாயத்துபணித்தள பொறுப்பாளர் மாற்றம்
அந்தியூர், டிச. 21-அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்.,ல், நுாறு நாள் வேலை திட்டத்தில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ஊதியம், 300 ரூபாய். ஆனால், பணித்தள பொறுப்பாளர் சாந்தி, 119 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அந்தியூர் யூனியன் அலுவலகத்துக்கு, 80க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.,சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ''பிடித்தம் இல்லாமல் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், பணித்தள பொறுப்பாளர் சாந்தி, இனி வேலைக்கு வரமாட்டார். வேறு ஒருவர் புதியதாக நியமிக்கப்படுவார்,'' என கூறவே, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.