உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கச்சேரிமேட்டில் இருந்து மினி பஸ் துவக்கம்

கச்சேரிமேட்டில் இருந்து மினி பஸ் துவக்கம்

கோபி, குக்கிராம மக்கள் நகர்ப்புறத்துக்கு வந்து செல்ல வசதியாக, ஈரோடு மாவட்டத்தில், 70 மினி பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன்படி கோபி, கச்சேரிமேட்டில் இருந்து, கெட்டிச்செவியூர் வரை மினி பஸ் சேவை துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் துவக்கி வைத்தார். தினமும் அதிகாலை, 4:20 மணிக்கு கச்சேரிமேட்டில் புறப்படும் மினி பஸ், இரவு 10:10 மணி வரை, கோபி-கெட்டிச்செவியூர் இடையே தலா ஆறு முறை இயக்கப்படுகிறது. 12 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கச்சேரிமேட்டில் புறப்படும் மினிபஸ், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், எஸ்.டி.என்., காலனி, பச்சைமலை, கரட்டூர் பிரிவு, மொடச்சூர், சுண்டப்பாளையம், வாய்க்கால்பாளையம், நாகதேவம்பாளையம், ஊஞ்சக்கரை, குரவம்பாளையம் பிரிவு, காவேரிபாளையம், நரியப்பள்ளம், சிறுவலுார், பதிப்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், வேலம்பாளையம், ஒட்டவலவு, தோரணவாவி, அருள்மலை வழியாக கெட்டிச்செவியூரை அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை