மேலும் செய்திகள்
தரம் உயர்த்தப்படாத ஈரோடு தீயணைப்பு நிலையம்
21-Sep-2026
கோபி:கோபி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்காக, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதி நவீன தீயணைப்பு வாகனம், கடந்த மார்ச் முதல் பயன்பாட்டில் உள்ளது. சென்சார் வசதியுடன் இயங்கும் இந்த வாகனத்தில், 5,500 லிட்டர் கொள்ளளவில் நீரை சேமிக்க முடியும். இந்நிலையில் வளர்ந்து வரும் கோபி டவுன் பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறான பகுதியில், தீ விபத்து நடக்கும் பகுதிக்கு இந்த வாகனத்துடன் விரைவது வீரர்களுக்கு சிரமமாக இருந்தது. இதை போக்கும் வகையிலும், துரிதமாக விரைந்து பணி மேற்கொள்ள, மினி தீயணைப்பு வேன், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்துள்ளது. இந்த வாகனத்தில் தீயணைக்க வசதியாக, 1,000 லிட்டர் தண்ணீர் மற்றும் 300 லிட்டர் சோப்பு நுரை சேமிக்கும் வசதி உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
21-Sep-2026