உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்

நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வெறிநாய்களால் பலியான கால்நடைகளுக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டது. இதில் ஆட்டுக்கு, 6,௦௦௦ ரூபாய்; கோழிக்கு, 200 ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு பெரியார்நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சந்தை மதிப்பில் ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர். அரசின் நிலை நிலையால் சந்தை மதிப்பு வழங்க இயலவில்லை. இந்தாண்டு எத்தனை ஆடுகள் வெறி நாய் கடியால் இறந்தது என்ற பட்டியல் கலெக்டரிடம் உள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் ஒழிப்பு விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை உள்ளது. விவசாய சங்கங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை