உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை யூனியன், டவுன் பஞ்., வளர்ச்சி பணி குறித்து அமைச்சர் ஆய்வு

சென்னிமலை யூனியன், டவுன் பஞ்., வளர்ச்சி பணி குறித்து அமைச்சர் ஆய்வு

ஈரோடு, ஜன. 4-சென்னிமலை யூனியன் மற்றும் டவுன் பஞ்., பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்து பேசினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட பஞ்., கவுன்சிலர் செல்வம், சென்னிமலை டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, 480 கோடி ரூபாய்க்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிந்ததை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்துள்ளார். கூடுதலாக காவிரி ஆற்றில் கிணறு அமைத்து, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை டவுன் பஞ்., பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் குழாய் சேதமானதை சீரமைக்க கோரினோம்.அதை செயல்படுத்த, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அப்பணியும் விரைவில் துவங்க உள்ளது. காங்கேயம் தொகுதியில் வீட்டுமனை பட்டா கோரிய மனுக்களில், தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை