உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூங்காவில் அமைச்சர் ஆய்வு

பூங்காவில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகேயுள்ள பூங்காவில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். சம்பத் நகர் சாலை நுழைவு பகுதியில் இருந்து அழகு துாணை அகற்றி, பூங்கா அருகே வைத்துள்ள இடத்தை ஆய்வு செய்து, அவ்விடத்தை அழகுபடுத்தும்படி யோசனை தெரிவித்தார். பின் பூங்கா வளாகத்தை முறையாக பராமரித்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பராமரிக்க யோசனை தெரிவித்தார். திருப்பூர் குமரன் சிலையை புதிதாக அமைத்து, அதை இங்கேயே நிறுவ இடம் தேர்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ