ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில்பெட்டகம் வழங்கிய அமைச்சர்ஈரோடு, நவ. 16-சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 'ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்', இரண்டாம் கட்டமாக, அரியலுார் மாவட்டம் வாரணவாசியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து ஈரோடு, எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாயாருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.பிறந்த, 6 மாதம் வரை உள்ள, 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இப்பெட்டகத்தில் நெய், புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம், இரும்பு சத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை என, 2,265 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளன.* மொடக்குறிச்சியை அடுத்த சென்னப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட துவக்க விழா நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி தொடங்கி வைத்து பேசினார். ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.