உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

சென்னிமலை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, ஹாஸ்பிடல் ரோடு, சி.கே.சி., நகரை சேர்ந்தவர் கருப்புசாமி, 56. இவர் பனியன் வியாபாரத்தில், 16 லட்சம் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பிறகு சரியாக துாக்கம் இல்லாமல் இருந்து வந்தவர், 2 மாதங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன்பு கருப்புசாமி, அவரது மனைவி தேவி ஆகியோர் சென்னிமலையில் உள்ள தேவியின் தந்தை வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற கருப்புசாமி மீண்டும் வராததால் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னிமலை யூனியன், முருங்கதொழுவு ஊராட்சி, சேமலைபாளையம் எல்.பி.பி., வாய்க்கால் பாலம் அருகில், இறந்த நிலையில் கருப்பசாமியின் சடலம் கரை ஒதுங்கி இருந்தது.அவரது உடலை மீட்டு, சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை