உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில்களில் மொபைல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

கோவில்களில் மொபைல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

கோபி,:ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில், இந்து முன்னணி செயற்குழு கூட்டம், கோபியில் நேற்றிரவு நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:இந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுவதும் வரும், 14 முதல், 20ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. ஒன்றரை லட்சம் இடங்களில், விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 1,500 இடங்களில் பிரதிஷ்டை செய்து, 29 இடங்களில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழக முதல்வர், ஏதாவது ஒரு பகுதியில் கலந்து கொள்ள வேண்டும்.கடந்த, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த எவரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளவில்லை. அது இந்துக்களுக்கு மனம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களில் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில்களில் மொபைல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிப்பது கண்டிக்கத்தக்கது. இதை வாபஸ் பெறவில்லை எனில், விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை