பருவமழை நடவடிக்கை மாநகராட்சி ஆலோசனை
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநகர நல அலுவலர் கார்த்திக்கேயன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கினார். கூட்டத்தில் உதவி ஆணையர்கள் லதா, சுபாஷினி உட்பட 21 துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.