டூவீலர் மீது கார் மோதல் தாய் சாவு; மகள் சீரியஸ்
காங்கேயம் :காங்கேயம், சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ மணிகண்டன், 46; ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் மனைவி சீலாதேவி, 35; தம்பதியரின் மகள் இனியா, 15; நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கடைவீதிக்கு, மனைவி மற்றும் மகளுடன் ராஜமணிகண்டன், டூவீலரில் சென்றார். சென்னிமலை ரோடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே காங்கேயம் செல்வதற்காக திரும்பியபோது, ஹூண்டாய் அசண்ட் கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சீலாதேவி, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மகள் இனியா சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய தினேஷ்குமார் மீது, காங்கேயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.