உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் நடக்கும் ரயில் சரக்கு சேவையை கொளத்துபாளையத்துக்கு மாற்ற எம்.பி., மனு

ஈரோட்டில் நடக்கும் ரயில் சரக்கு சேவையை கொளத்துபாளையத்துக்கு மாற்ற எம்.பி., மனு

ஈரோடு: மத்திய அரசின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சார குழு எனப்படும் டி.டி.சி., கமிட்டி கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற, ஈரோடு எம்.பி., பிரகாஷ், கமிட்டி தலைவர் சஞ்சய்கு-மாரிடம் வழங்கி மனுவில் கூறியதாவது: ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை இணைப்புக்கு, நான்கு இடங்களில் மேம்பாலம் தேவை. இதில் முதல் பாலமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முதல் லோட்டஸ் மருத்துவமனை வழியாக நாடார்மேடு வரை; இரண்டாவதாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு முதல் வெண்டிப்பா-ளையம் வழியாக சோலார் வரை; மூன்றாவதாக சென்னிமலை சாலை கே.கே.நகர் முதல் பிஷப் ஹாஸ்பிடல் வழியாக ரிங் ரோடு வரை மேம்பால், 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். பெருந்துறை ஆர்.எஸ்., முதல் சென்னிமலை சாலையிலும், ஈரோடு - கரூர் - நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள சாவ-டிப்பாளையத்திலும், பஞ்சலிங்கபுரம் ஆரியங்காட்டு பகுதியிலும் மேம்பாலமாக அமைத்து தர வேண்டும். நாமக்கல் மாவட்டம் ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஈரோடு நகருக்குள் அமைந்துள்ள ரயில்வே சரக்கு சேவையை ஈரோட்டில் இருந்து, 3 கி.மீ.,க்கு அப்பால் கொளத்துப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை