உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழா நடத்தாமலே கடைகள் திறப்பு கடைக்காரர்களால் நகராட்சி ஷாக்

விழா நடத்தாமலே கடைகள் திறப்பு கடைக்காரர்களால் நகராட்சி ஷாக்

புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக புதிய வணிக வளாகம், நகராட்சி அலுவலகம் முன் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ௧௪ கடைகள் கட்ட திட்டமிட்டு, 11 கடைகள் மட்டுமே கட்டி முடித்து பொது ஏலத்திலும் விடப்பட்டன.கடைகளை ஏலம் எடுத்தவர்கள், நகராட்சி அலுவலகத்தில் சாவிகளை பெற்று, ஷோகேஸ் அமைத்தல், வயரிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் ஒரு சில கடைக்காரர்கள், அவர்களாகவே விழா நடத்தி தீபாவளியை முன்னிட்டு கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடைகளுக்கு பூட்டு போட்டு ஷட்டரில் நோட்டீஸ் ஒட்டினர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வணிக வளாக கடை திறப்பு விழாவுக்காக அரசிடம் தேதி எதிர்பார்த்து காத்திருக்கிறோம். விழா முடிந்தவுடன் கடைகள் முறையாக ஒப்படைக்கப்படும். ஏலம் எடுத்த மூன்று கடைக்காரர்கள் தீபாவளியை முன்னிட்டு தாங்களாகவே திறந்து வியாபாரம் செய்துள்ளனர். தன்னிச்சையாக செயல்பட்ட கடைகளுக்கு, நகராட்சி சார்பில் பூட்டு போடப்பட்டது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை