உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண் மர்மச்சாவு

இளம்பெண் மர்மச்சாவு

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள நகலுார், வீரனுாரை சேர்ந்தவர் தமிழரசு, 30; தனியார் பஸ் கண்டக்டர். இவரின் மனைவி சசிகலா, 26; தம்-பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் துாங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் இரண்டாவது குழந்தை அழுகுரல் கேட்டு தமிழரசு எழுந்து பார்த்தார். சமையலறையில் சசிகலா இறந்து கிடந்தார். அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்-பற்றி, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சசிகலாவுக்கு வலிப்பு நோய் இருந்தது தெரிய வந்துள்ளது. சாவுக்கு இதுதான் காரணமா அல்-லது வேறு காரணமா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி