மேலும் செய்திகள்
தொழில் பழகுநர் முகாம் செங்கையில் இன்று நடக்கிறது
14-Jul-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க, ஈரோடு சென்னிமலை சாலை, காசிபாளையம் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில், பிரமதரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 11:00 காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.இம்மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழில் பழுகுனர் காலி இடங்களுக்கு அப்ரன்டிஸ்களை தேர்வு செய்ய உள்ளனர். பயிற்சியாளர்கள் தங்கள் மதிப்பெண் சான்று, என்.டி.சி., சான்றிதழ், மொபைல் எண், இ-மெயில் ஐ.டி., - ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய ஆவணங்களுடன், ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,க்கு வந்து பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, 94433 84133, 94424 94266 என்ற எண்களில் அறியலாம்.
14-Jul-2025