தே.மு.தி.க., பொதுக்கூட்டம்
டி.என்.பாளையம்: தே.மு.தி.க., கட்சியின் கொடிநாள் வெள்ளி விழாவை முன்னிட்டு, கணக்கம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., மோகன்ராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார். இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகமூர்த்தி, நிர்வாகிகள் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.-